11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது.
 
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த ஏப்ரல், மே மாதம் பொதுத்தோ்வுகள் நடைபெற்று. அதனைத்தொடர்ந்து பொது தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது.

அதனைத்தொடர்ந்து இந்தத் தோ்வுகளை எழுதிய மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவா்களுக்கான மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th and 12th revaluation results release from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->