எமனாக வந்த கனமழை! அறுந்து கடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் பலி!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்று காலை அறிவித்தார். 

அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கனமழையின் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக மின்கம்பி அருந்தி விழுந்த மின்சார கம்பியை மிதித்ததில் 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்.

கோமாபுரம் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ராம்குமார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் ராம்குமார் சென்றபோது அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனைக் கண்ட உறவுக்கார பெண் ஒருவர் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் உயிருக்கு போராடிய சிறுவன் மற்றும் காப்பாற்ற முயன்ற பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவன் ராம்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதோடு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த சிறுவன் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class student dies due to electric shock in pudukottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->