ஒரே நாளில் ₹1000 கோடி போச்சு! டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய தமிழக அரசை கண்டித்து ஸ்ட்ரைக்! - Seithipunal
Seithipunal


மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் சுமார் 3.5 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. 

அண்மையில் தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதால் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது தொழிலதிபர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதன் காரணமாக இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக முழுவதும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை எழுந்துள்ளனர். அதன் அடிப்படையில் கடலூர் பண்ருட்டி முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதேபோன்று தமிழகத்தின் டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை பனியன், பிரின்டிங், நெட்டிங் என பத்தாயிரம் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் அம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற்று வரும் போராட்டம் டாலர் சிட்டியான திருப்பூரை டல் சிட்டியாக மாறி உள்ளது.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று நடைபெற்று வரும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவிட்டால் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளில் மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் 12 கிலோ வாட்டுக்கு குறைவாக உள்ள சிறு , குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டியை மாற்றுவது குறித்து பரீசிலிக்கப்படும் என அறிவித்த நிலையில் இன்று தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 crores loss due to industrial strike across TamilNadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->