1 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்! அப்போ மாணவர்களின் நிலை? - Seithipunal
Seithipunal


1 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்! அப்போ மாணவர்களின் நிலை?

கடந்த சில நாட்களாகவே தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன. 

அதனால், பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகமே தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது. இதே சமயம் "சம வேலைக்கு சம ஊதியம்" எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் போராட்டத்தின் போது, 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்க உள்ளது. 

இந்த பயிற்சியை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த முடிவால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 to 8th class teachers will not come to school for protest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->