குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள 02 பேருக்கு நெல்லை மாநகர எல்லைக்குள் நுழைய தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பொது மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள 02 பேருக்கு 06 மாதங்கள் வரை திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் நுழைய  மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தடை  விதித்துள்ளார். 

இது குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- நெல்லை மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாநகரம்,பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் என்பவர் 28.4.2025-ல் இருந்தும் மற்றும் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், குட்டத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் படுகையூர் பாஸ்கர் என்பவர் 29.4.2025-ல் இருந்தும் 6 மாதங்களுக்கு நீதிமன்ற வழக்கு விசாரணை, காவல்துறை வழக்கு விசாரணை போன்ற காரணங்களைத் தவிர திருநெல்வேலி மாநகரின் காவல் எல்லைக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட முத்துக்குமார் மீது 06 வழக்குகளும், படுகையூர் பாஸ்கர் மீது 34 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 people involved in criminal activities banned from entering the Nellai city limits Police Commissioner order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->