ஐபில் வரலாற்றிலே அதிகபட்ச ஸ்கோர்..ஹைதெராபாத் அணி சாதனை.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 30வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் ஹைதெராபாத் அணியும் மோதுன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய ஹைதெராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கேட்களை இழந்து 287 ரன்களை எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னர் ஹைதெராபாத் அணி அடித்த 277 ரன்களே வரலாற்று சாதனையாக இருந்தது குறிப்பிடதக்கது. அதிகபட்சமாக ஹெட் வெறும் 42 பந்துகளில் 102 ரன்களை குவித்தார். கிளசன் 31 பந்துகளில் 67 ரன் குவித்தார்.

போட்டியின் இரண்டாம் பாதியில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 267 ரன்களை எடுத்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. விராட்கோலி 20 பந்துகளில் 42 ரன் எடுத்து வெளியேற, டுப்ளஸிஸ் 28 பந்துகளில் 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83ரன்களை எடுத்தார்.

பெங்களூரு அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 1 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது. ஹைதெராபாத் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World record created by srh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->