பாதி ஆட்டத்தில் எனக்கு வந்த மெசேஜ்! உண்மையை போட்டுடைத்த விராட் கோலி! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்னும், ஸ்ரேயாஸ் 77 ரன்னும் அடித்து அசத்தினர். 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, ஜடேஜா, ஷமி, குல்தீப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டை போல அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில், 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்வதற்கு முன் விராட் கோலி அளித்த பேட்டியில், "இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய சவாலாக உள்ளது. ஆனால் ரோகித் சர்மா, சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். 

மிடில் ஓவர்களில் பந்து சற்று நின்று திரும்பியதும், பின்னர் அடுத்த 10 ஓவர்களுக்கு பிறகு பந்து மிக மெதுவாக ஆனதால் நான் இறுதிவரை சற்று கவனத்துடன் விளையாடினேன்.

அப்போது, டீம் மேனேஜ்மென்டிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. நான் இந்த ஆட்டத்தின் இறுதிவரை நின்று விளையாட வேண்டும், மற்ற வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்று அந்த மெசேஜ் தெரிவித்தது.

நானும் அதன்படியே நான் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடினேன். மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா  மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா இல்லை என்பதால், ஒன்று இரண்டு விக்கெட்டுகளை விட்டால் கூட அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே ஆட்டத்தின் இறுதிவரை நான் நின்று விளையாடியதால் சதமும் அடித்தேன். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. மேலும் என்னுடைய பிறந்தநாளில், இவ்வளவு ரசிகர்கள் மத்தியில் நான் சதம் அடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது" என்றார் விராட் கோலி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup 2023 Cricket India South Africa virat 100


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->