வரும் ஐ.பி.எல் தொடரில் தல தோனி விளையாடுவாரா? யோசித்து காசி விஸ்வநாதன் அளித்த பதில்! என்ன எப்படி சொல்லிட்டாரு! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

தற்போது 44 வயதான தோனி, 2026 ஐபிஎல் தொடருடன் தனது கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பல இளம் வீரர்களை தேர்வு செய்ததோடு, நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களையும் அணியில் சேர்த்தது. இதனால், தோனிக்கான மாற்று வீரரை உருவாக்கும் முயற்சியாக இதை பலர் பார்த்தனர்.

மேலும், சஞ்சு சாம்சன் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பெரிய தொகைக்கு டிரேடிங் செய்யப்பட்டதும், இந்த சீசனுக்குப் பிறகு தோனி ஓய்வு பெறலாம் என்ற ஊகங்களை வலுப்படுத்தியது. சில தகவல்களில், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக செயலாளர் காசி விஸ்வநாதனிடம், “இந்த ஆண்டு தோனி விளையாடுவாரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவாக, “அவர் விளையாடுவார், அவர் விளையாடுவார்,” என்று பதிலளித்தார்.

இந்த பதில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது. 2026 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்கவுள்ள நிலையில், தோனியின் பங்கேற்பு மீண்டும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Dhoni play in the upcoming IPL series Kasi Viswanathan thoughtful answer


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->