யாருவந்தாலும் அடிப்போம்.. வெற்றி நமக்குத்தான்..! விராட் கோலியின் அதிரடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


நேற்றுநடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் அசத்தலான ஆட்டத்தை ஆடினார்கள்.

இதில், இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த ரன்கள் மூலம் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டி போட்டியில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்) அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்னும் தோனியின் சாதனை முறியடித்தார் விராட்கோலி.

மேலும், இந்திய கேப்டன் விராட் கோலி கேப்டனாக இதுவரை 199 இன்னிங்சில் பேட்டிங் செய்து 11,208 ரன்கள் குவித்திருக்கிறார். முன்னதாக தோனி 330 இன்னிங்சில் 11,207 ரன்கள் எடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து, விராட் கோலி 14 ரன்கள் எடுத்தபோது ஒரு கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ind vs aus seithipunal

தற்போது வரும் 24 ஆம் தேதியன்று நியூசிலாந்து நாட்டிற்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக நியூசிலாந்து நாட்டிற்கு இன்று புறப்பட்டு செல்லும் இந்திய அணி, அங்கு வைத்து 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலிய போட்டி நிறைவு பெற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, கடந்த வருடத்தில் நியூசிலானது நாட்டில் விளையாடிய விதம் தங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. இது எங்களுக்கு பல்வேறு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியது. இதனைப்போன்று இந்த வருடமும் அமையும். சென்ற வருடத்தை போலவே இந்த வருடமும் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்து உற்சாகத்துடன் விளையாடுவோம்.  

சொந்தநாட்டில் தொடரை வெல்வது எப்போதும் மகிழ்ச்சிதான். முதல் தரமான ஆட்டம் வெளியாகும் போது, எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனை கடந்த வருடத்தில் செய்திருந்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பங்களிப்பை செய்திருந்தனர். இதனைப்போன்றே தற்போதும் நியூசிலாந்தில் விளையாடுவோம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் எங்களுக்கு கிடைத்த வெற்றியை நெருக்கடியில் இருந்து மீட்டோம். எங்களது வெற்றி எண்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virat kohli speech after won match


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->