மீண்டும் கேப்டனாக களமிறங்கும் கிங் கோலி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

முதல் போட்டி டிராவில் முடிந்ததால், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். 

இதனிடையே, 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விராட் கோலி இடத்தில் களமிறக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை நீக்க வாய்ப்பு இல்லை. எனவே இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த போட்டியில் புஜாரா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத காரணத்தால், புஜாரா நீக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli returns for 2nd test match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->