நேற்று ரோகித் சர்மா! இன்று விராட் கோலி! சோதனையை சந்திக்கும் இந்திய அணி சாதிக்குமா! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா அணி இங்கிலாந்து அணியை அடிலெய்டியில் எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தை பொருத்தவரை விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி இதுவரை 907 ரன்களை அந்த மைதானத்தில் குவித்துள்ளார். இதன் காரணமாக அவர் 75.88 ரன்கள் சராசரியை பெற்றுள்ளார். குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி இரண்டு சதங்களை அடித்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் இரண்டு போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 154 ரன்கள் குவித்துள்ளார் அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இதன் காரணமாக அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியா வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். 

இந்த நிலையில் இன்று அடிலெய்ட் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது ஹர்சல் பட்டேல் வீசிய பந்தால் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்து சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்தார். எனினும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் மீண்டும் தனது பயிற்சியை தொடர்ந்தார். விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோன்று நேற்று ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவரும் தனது பயிற்சியை தொடர்ந்தார். இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த ஏற்படும் காயங்கள் குறித்து முழுமையான தகவலை பிசிசிஐ தற்பொழுது வரை வெளியிடவில்லை. இந்தியா அணி ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பே பும்ரா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் காயம் காரணமாக உலக கோப்பை டி20 தொடருக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli injured during net practice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->