ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சி; 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத வைபவ் சூர்யவன்ஷி..? - Seithipunal
Seithipunal


18-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி உளம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்தவர், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி. அதிலும் முதல் பணத்தில் சிக்ஸர் பறக்கவிட்டதோடு, ஒரு சத்தத்தினையும் அனுபமிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆடி அசத்தினார்.

அத்துடன், அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். அதேபோன்று சமீபத்தில் நடந்து முடிந்த, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக ஆடினார்.

அவர், 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். வைபவ் ,பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வருகின்றார். இந்நிலையில், இன்று தொடங்கிய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  சூர்யவன்ஷி, எழுதவில்லை என்று அவரின் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;  கிரிக்கெட் பயிற்சி காரணமாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வை எழுதாமல் இருக்கலாம். அடுத்த பாடத்தேர்வை அவர் எழுதுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார். .இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaibhav Suryavanshi did not write the 10th standard public exam


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->