ICC T20I & ODI Ranking; முதலிடத்தில் இந்திய வீரர்கள்; 230 இடங்கள் முன்னேறி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி..! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று புதிய ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அணியின் இளம் மற்றும் மூத்த வீரர்கள் பலரும் தங்களது தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரை 3-0 என  இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. இதில் 151 ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி, 'தொடர் நாயகன்' விருதை வென்றார். 15 வயதான இளம் வீரர் T20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 230 இடங்கள் முன்னேறி, 48-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதே T20I பேட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் உலக அளவில் முதலிடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார். இத்தொடரின் போது அவர் 916 ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம், சூர்யகுமார் யாதவ் (912) மற்றும் விராட் கோலி (909) ஆகியோரின் வாழ்நாள் சிறந்த ரேட்டிங் புள்ளிகளை மிஞ்சியுள்ளார்.

அடுத்து, ஒருநாள் கிரிக்கெட் (ODI) பேட்டர்கள் தரவரிசையில், நியூசிலாந்தின் டேரில் மிட்செல்லைப் பின்னுக்குத் தள்ளிய இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில் மீண்டும் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

T20I பேட்டர்கள் வரிசையில் திலக் வர்மா 06-வது இடத்திற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 24-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேபோல், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் 31 இடங்கள் உயர்ந்து 41-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேப்போன்று, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 05 மெய்டன் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜஸ்டின் க்ரீவ்ஸ், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 09-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் 04 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaibhav Suryavanshi creates record by moving up 230 places in ICC T20 rankings


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->