உலகக்கோப்பை காலியிறுதியில், இந்தியா பரபரப்பான ஆட்டம், போராடும் ஆஸ்திரேலியா!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி போட்டி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்தப் போட்டியானது மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கியது

வலுவான இரண்டு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் தொடக்கமானது சரியாக அமையவில்லை. முதல் 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்ற தொடக்க ஜோடி ஆனது 35 ரன்களை மட்டுமே எடுத்தது. 10 ஆவது ஓவரில் சக்சேனா 26 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

அதற்கடுத்து வந்த நட்சத்திர வீரர்களான திலக் வர்மா 2 ரன்களிலும் கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்களிலும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாற்றத்தை கண்டது. அதுவும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் 48 பந்துகளை சந்தித்து வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 பந்துகளில் 62 ரன்களை குவித்து 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

 

அடுத்த படியாக களமிறங்கிய ஆல் ரவுண்டர் சித்தேஷ் வீர் 42 பந்துகளில் 4௪ பவுண்டரியுடன் 25 ரன்களை அடித்து இந்திய அணிக்கு ஓரளவு நம்பிக்கை அளித்தார். அதற்கடுத்ததாக களமிறங்கிய அதர்வா, ரவி பிஷ்ணோய் ஜோடியானது அணிக்கு கவுரவமான இலக்கை எட்டுவதற்கு ஏற்றதுபோல ஆட்டத்தை தொடர்ந்தது. இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டின் மூலம் பிரிந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரவி பிஷ்நோய் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் இருந்த இந்திய அணி 200 ரன்களை கடப்பதற்கு இந்த ஜோடியானது மிக முக்கிய பங்காற்றியது. 

அதன் பிறகும் அதிரடியை தொடங்கிய அதர்வா இறுதிவரை களத்தில் நின்று அரைசதம் அடித்தார் அவர் 54 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 55 ரன்களை குவித்து இந்திய அணி ஓரளவு சவால் விடும் இலக்கை நிர்ணயிக்க உதவினார்.  50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

234 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, முதல் ஓவரே அதிர்ச்சிகரமாக அமைந்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பந்து எதுவும் சந்திக்காமலேயே எதிர் முனையில் நின்று ரன்  எடுக்க ஓட முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் கேப்டன் மெக்கன்சி ஹார்வி, லச்சல் ஹீரனே இருவரும் ஆட்டமிழந்து வெளியேற, முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளிக்க, அதன் பின்னர் சாம் பான்னிங், பாட்ரிக் ரோவ்  நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர்.

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொடுத்த இந்த ஜோடி ஆனது, மீண்டும் அழைத்து வரப்பட்ட கார்த்திக் தியாகி பந்துவீச்சில் பிரிந்தது. 35 ஓவர் வரை பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் என்ற பரிதாபமான நிலையில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் சாம் பான்னிங் 106 பந்துகளை சந்தித்து 57 ரன்களுடன் களத்தில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த கோரி கல்லிக்கு பதில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய லியான் ஸ்காட் தற்பொழுது பான்னிங்குடன் விளையாடி வருகிறார். 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய வீரர் கார்த்திக் தியாகி ரன் அவுட் நீங்களாக மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U19 world cup quarter final India vs Australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->