சூப்பர் ஓவரில் சூப்பரான வெற்றி! டிவிட்டரில் வீரர்கள் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா!   - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 179  ரன்கள் குவித்தது. அதனை விரட்டிய நியூசிலாந்து அணி அதே 179 ரன்கள் மட்டுமே குவிக்க ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் ரோஹித் ஷர்மாவின் அசத்தலான சிக்ஸர்களால் அபார வெற்றியை பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாமிஷ்  பென்னட் வீசிய 6 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாச 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா.

எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. தொடக்க வீரர் மார்டின் குப்டில் அதிரடியாக விளையாடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்கள் சரிந்தாலும் அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடி அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கு மிகவும் கடுமையாக உழைத்தார். அவர் 95 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். 

அது ஆட்டத்தில் திருப்புமுனையாக ஏற்பட்டது. 5 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையிலிருந்த நியூசிலாந்து அணி கடைசி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் ஒரு ரன் பைஸ் ஆக எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் முதல் பந்தே சிக்ஸ் கொடுத்த முகமது சமி அடுத்த 5 பந்துகளை சிக்கனமாகவே வீசினார். இறுதி பந்தில் ரோஸ் டைலரை அவுட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எதிர்பாராமல் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி நகர்ந்தது. 

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கேப்டன் கனே வில்லியம்சன் மார்ட்டின் குபதில் களமிறங்க, இந்திய அணி ஜஸ்பிரித் பும்ராவை கொண்டு வந்தது. 6 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சரும் உட்பட 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ராகுல் களம் இறங்கினார்கள். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி பந்துவீசினார். 6 பந்துகளில் இந்திய அணி 20 ரன்கள் எடுக்க  இந்திய அணி வெற்றி பெற்றது.

இது ஆட்டம் தொடர்பாக ட்விட்டரில் வந்த பதிவுகளில் சில.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter reactions after super over victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->