கோலாகலமாக தொடங்கும் ஐபிஎல் போட்டி - சென்னையில் போக்குவரத்து மாற்றம்.! - Seithipunal
Seithipunal


17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டியையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, விக்டோரியா ஹாஸ்டல் சாலை மற்றும் பெல்ஸ், பாரதி, வாலாஜா, காமராஜர் உள்ளிட்ட சாலைகளில் இன்று மற்றும் மார்ச் 26 ஆம் தேதி மாலை ஆறு மணி முதல் பதினொரு மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

traffic change in chennai for ipl


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->