சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்.. தோனியின் நியூ பிளான்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 14ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து அணைகளிலும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 190 ரன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுலபமாக அடித்து வெற்றி பெற்றது. அதில் சிஎஸ்கே 189 ரன்களை எடுத்தது. ஆனால் பவுலிங் சரியாக இல்லாத காரணத்தால் 17.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இன்று மலை சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், 15 முறை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 9 முறை டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை டெல்லி அணியை எதிர்கொள்ள நிச்சயமாக சென்னை அணியில் மாற்றங்கள் இருக்கும். ஏனென்றால், சாம் கரனுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தும் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை. ஆகையால், அவர் இன்றைய போட்டியில் இடம் பெற வாய்ப்பு இல்லை. அது மட்டுமின்றி முக்கியமான பவுலரான தீபக் சஹார் இந்த போட்டியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச பட்டியல் :

ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி (கேப்டன் , விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today match may be 2 change in csk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->