#SRH vs RR : வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஹைதராபாத்? பிளேஆப்க்கு முன்னேறுமா ராஜஸ்தான்!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 50வது லீக் ஆட்டமான இன்று ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த ஐபில் ஹைதராபாத் அணி மூன்று முறை 250 க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளது. அதுமற்றும் மல்லாமல் ஐபில் வரலாற்றில் 288 ரன் அடித்து சாதனை படைத்துள்ளது . ராஜஸ்தான் அணி எந்த ஐபில் தொடரிலும் இல்லாத அளவுக்கு இந்த ஐபில் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் அவர் டி 20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி சென்னை அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்களை அடித்தது. ஹைதராபாத்  அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் எடுத்து 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி பெற்றது.

ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் லக்னோ அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ரன்களை அடித்தது. பின்னர் , ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 199 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது  இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ipl match srh vs rr


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->