இந்த ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணியை தான் வெல்லும்.!! முன்னணி பந்துவீச்சாளர் நம்பிக்கை.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில்  நடைபெறும் 12  வது  உலகக்கோப்பை போட்டி. இதில் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என நம்பிக்கை கூறியுள்ளார் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தற்போது ஒரு கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறார். அதில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்கள் கிரிக்கெட் விளையாட உதவுவதற்கு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கிரிக்கெட் திறமை உள்ள சிலர் உபககரணங்கள் இல்லாமல் விளையாட முடியாமல் இருக்கின்றனர். சென்னையில் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இது போல் ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவேன் என கூறியுள்ளார்.  

நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் நினைத்தது போல் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது . இந்த முறை இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன். மேலும் ஷிகர் தவான் காயம் அடைந்து இருப்பது பெரிய இழப்பு  இல்லை. அந்த இடத்தை நிரப்ப  இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். கடந்த உலாக்கப்பை 2003, 2007-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி இருந்தது. அதைப்போல இந்திய அணியும் தற்போது வலுவாக உள்ளது என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார்.

English Summary

This year's world cup will win the Indian team. leading bowler belief


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal