#BREAKING :: விராட் கோலியின் தெறி ஆட்டம்.. இலங்கைக்கு 391 ரன் இலக்கு..!! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் உமர் மாலிக், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இன்றைய போட்டியில் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த போது ஆட்டம் இழந்தார். அவருடன் களம் இறங்கிய சுமன் கில் 116 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

அதன் பிறகு களம் இறங்கிய கே.எல் ராகுல் 7 ரன்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி வரை ஆட்டம் எடுக்காமல் இருந்த விராட் கோலி தனது அதிரடி ஆட்டங்களால் 166 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர்கள் உட்பட 13 பவுண்டரிகள் அடங்கும். இலங்கை அணி தரப்பில் கசும் ரஜிதா, லகிரு குமார தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணிக்கு 391 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Team India set a target of 391 for Sri Lankan team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->