சொந்த மண்ணில் மிரட்டலான 2023-2024 சீசன்.! இந்திய அணிக்கான அட்டவணை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி தற்பொழுது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ள நிலையில் அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 

அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இவ்வாறு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்திய அணி தொடர்ந்து அடுத்தடுத்து சர்வதேச விளையாடி வரும் நிலையில் 2024 மார்ச் மாதம் வரை இந்திய அணி பங்கேற்க உள்ள தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம்:

உலகக்கோப்பை உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் 3 ஒரு நாள் போட்டி மற்றும் நவம்பர் 23, 26, 28 மற்றும் டிசம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணம்:

ஆஸ்திரேலியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி ஜனவரி 11, 14, 17 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம்:

இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி ஜனவரி 25, பிப்ரவரி 2, 15, 23 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. 

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவில் நடைபெறும் பல்வேறு தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் ஒரு போட்டி கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Team India match schedule release 2023 to 2024 season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->