டி20 உலகக்கோப்பை :  தென் ஆப்பிரிக்காவுக்கு சதி செய்த மழை.. பாகிஸ்தான் வெற்றி.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று மதியம் 1.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்  தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சதாப்கான் 22 பந்துகளில் 52 ரன்களும், இப்திகார் அகமது 35 பந்துகளை 51 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தடைபட்டது.

இதனையடுத்து தாமதமாக தொடங்கிய போட்டியில் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிரடியாக தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து இறுதியாக 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Pakistan beat South Africa win by 33 runs


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->