டி20 உலக கோப்பை : வாழ்வா? சாவா? போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் பாகிஸ்தான் மோதல்.. பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிகள் பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இந்திய அணி 6 புள்ளிகள் உடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்றைய தினம் தோல்வியடைந்தால் உலக கோப்பையில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக மற்றொரு அணி எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று மதியம் 1.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்  தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம்

தென்னாப்பிரிக்கா அணி 11 வீரர்கள் :

குயின்டன் டி காக்(w), டெம்பா பவுமா(c), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

பாகிஸ்தான் அணி 11 வீரர்கள் :

முகமது ரிஸ்வான்(w), பாபர் ஆசம்(c), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா

டி20 உலக கோப்பையில் இதுவரை

டி20 உலக கோப்பையில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான அணி வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup PAK vs SA match Pakistan batting


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->