T20 உலகக் கோப்பை போட்டி: கனடாவின் அணி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. குரூப் எ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்று விளையாடுகிறது. 

டி20 உலக கோப்பை குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்காவுடன் கனடா விளையாட உள்ளது. இந்நிலையில் கனடா அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் சாத் பின் ஜாஃபர் மற்றும் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் புட்டு தாஸ்சன நாயகே உள்ளார். 

வருகின்ற ஜூன் 1ஆம் தேதி கனடா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. 15 பேர் கொண்ட கனடா அணியில் சாத் பின் ஜாஃபர், ஆரோன் ஜான்சன், டிலோன் ஹெய்லிகர், தில்ப்ரீட் பஜ்வா, ஹார்ஷ் தாகேர், ஜெரிமி கார்டோன், ஜுனாய்த் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் டக்கூர், நவ்னீத் தலிவால், நிகோலஸ் கிர்டோன், பரகத் சிங், ரவீந்திரபால் சிங், ராயன்கான் பதான், ஸ்ரேயாஷ் மோவ்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ரிசர்வ் வீரர்களாக ஆதித்யா வரதராஜன், அம்மர் காலித், ஜடிந்தர் மதரு, பர்வீன்குமார் மற்றும் டிராவலிங் ரிசர்வ் வீரராக தஜிந்தர் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Canada Team Announced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->