இலங்கை அணியில் மீண்டும் ஒரு மலிங்கா! வைரலாகும் பயிற்சி வீடியோ!! - Seithipunal
Seithipunal


இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா (வயது 35). மலிங்கா சிறப்பான பந்துவீச்சால் எதிரணியை அலறவிட கூடியவர். 

இதுவரை மலிங்கா 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மலிங்கா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

மலிங்காவுக்கு நிகர் யாருமே இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும் யார்க்கர் மன்னன் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் மலிங்காவை போலவே பந்துவீசும் நுவன் துஷராவின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 24 வயதாகும் இவர் ஐந்து முதல் தர போட்டியில், 14 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மலிங்காவை போன்றே பந்து வீச முயற்சி செய்துவருவதாக கூறினார். இவர் இலங்கை அணிக்கு மற்றோரு மலிங்காவாக  பார்க்கப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lanka team next malinga for nuwan thushara


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->