அடுத்தாண்டு முதல் இரண்டு ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

பிசிசிஐ ஆண்கள் கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஆனால் பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை. ஒருபுறம் ஐபிஎல் மூலம் கோடிகளை குவிப்பதால் பிசிசிஐக்கு பாராட்டுகள் குவிந்தாலும், பெண்களை ஐபிஎல் தொடங்காததால் பிசிசிஐ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக் மற்றும் இங்கிலாந்தில் மகளிர் சூப்பர் லீக் போன்ற போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் மிகப் பெரிய சந்தையான இந்தியாவில், பெண்கள் டி20 லீக் நடைபெறாமல் உள்ளது. 

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை ஆண்கள் கிரிக்கெட்டில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட லீக் போட்டிகளில் ஐபிஎல், இனி மகளிர் கிரிக்கெட்டிலும் விரிவு படுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். 

அடுத்த சில மாதங்களில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். ஏற்கனவே பல முன்னாள் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் மகளிர் கிரிக்கெட் ஐபிஎல் போட்டிகளுக்காக குரல் கொடுத்து வரும்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sourav ganguly says about women ipl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->