இந்திய கிரிக்கெட்டின் தாதாவாக வலம் வரும் கங்குலி பிறந்த தினம் இன்று.. அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of the off side) என அழைக்கப்படுகிறார்.

1992 ஆம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் கங்குலி. அந்த தொடரில் மூன்று ரன்களுடன் ஆட்டம் இழந்தார். இந்த  தொடருடன் கழட்டி விடப்பட்டு 4 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் கங்குலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். உலகின் தலைசிறந்த துவக்க ஜோடியாக சச்சினுடன் இணைந்து 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்கள் குவித்தது இன்றளவும் யாரும் நெருங்க முடியாத சாதனையாக உள்ளது. 

கேப்டனாக இருந்தபோது வழக்கமாக கடைபிடிக்கும் மரபுகளை மாற்றிக் துணிச்சலான முடிவுகளை அமுல்படுத்தி காட்டியது அனைவரும் அறிந்திருப்போம். அதன் பிறகு மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது பாரம்பரியமான ஈடன்கார்டன் மைதானத்தை நவீனப்படுத்தினார்.

இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sourav ganguly birthday 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->