ஆஹா., மிஸ் பண்ணிட்டீங்களே?! ஷேன் வாட்சன் சொன்ன அந்த மேட்டர் இருக்கே! - Seithipunal
Seithipunal


 நேற்று முன்தினம் தொடங்கிய ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 71 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், அம்பத்தி ராயுடுவை 2019 உலகக்கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாதது இந்தியாவுக்குத்தான் நஷ்டம் என சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், “ராயுடு அபாரமாக ஆடினார். அவர் நம்பமுடியாத அளவுக்கு திறன் கொண்ட பேட்ஸ்மென். 2019 உலகக்கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாதது இந்தியாவுக்குத்தான் நஷ்டம்.

அதுவும் பும்ரா பந்தை அவர் ஆடிய விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது, ராயுடு மைதானத்தின் அனைத்து இடங்களிலும் (360) பந்தை அடிக்கக் கூடியவர். தன் பழைய அணியான மும்பைக்கு எதிராக அவர் நிரூபிக்க வேண்டியும் இருந்தது” என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shane watson open talk about ampathi raidu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->