ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர்... இமாலய சாதனை படைத்தவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


ஹிட்மேன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்...

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்...

ஐபிஎல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்...

ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்...

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் அடித்த வீரர்...

டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்...

ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள்... அதிக சிக்ஸர்கள் அடித்தவர்...

யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா???

இவர் தான்...

ரோகித் சர்மா:

பிறப்பு

ரோகித் சர்மா ஏப்ரல் 30ஆம் தேதி 1987ஆம் ஆண்டு பன்சோத், நாக்பூர், மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ரோகித் குருநாத் சர்மா. ஆஃப் ஸ்பின்னராக தான் ரோகித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2005ஆம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியில் ரோகித் முதலில் களமிறங்கினார்.

குடும்பம்

ரோகித் சர்மாவின் தந்தை குருநாத் சர்மா. தாயார் பூர்ணிமா சர்மா. இவருக்கு விஷால் சர்மா என்ற இளைய சகோதரரும் உள்ளார்.

ரோகித் சர்மா ரித்திகா என்பவரை 6 ஆண்டுகள் காதலித்து 2015ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ரோகித் சர்மா-ரித்திகா தம்பதிக்கு சமைரா என்ற அழகான பெண்குழந்தை உள்ளது.

சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்திய சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் ரோகித் சர்மா.

ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்கள் அடித்து இமாலய சாதனை படைத்தவர்.

ஒரே உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

தனது டி20 பன்னாட்டுப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர், அதிகமுறை நூறு அடித்தவர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலக கிண்ணத்தில் அதிக நூறுகள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.

2015-2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் அடுத்தடுத்து இரண்டு சதங்களும், இறுதிப் போட்டியில் 99 ரன்களும் அடித்து அசத்தினார். 441 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

விருது

ரோகித் சர்மாவுக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஈஎஸ்பிஎன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் விருதினைப் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டின் ஈஎஸ்பிஎன் சிறந்த பன்னாட்டு டி20 கிரிக்கெட் வீரர் விருதினைப் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit dharma History


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->