அறிமுக ஆட்டத்திலேயே மரண அடிஅடித்த ராபின் உத்தப்பா ஓய்வு!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். 

எவ்வாறாயினும், அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்" என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ராபின் உத்தப்பா (42 வயது), 2006 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். தனது முதல் ஆட்டத்திலேயே துவக்க வீரராக களம் இறங்கி 86 ரன்கள் எடுத்து அசத்தினார்.

கிரிக்கெட்டில் இவரின் ஆட்ட முறைக்கு 'தி வாக்கிங் அசாசின்' எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படும் ராபின் உத்தப்பா, 2007 டி20 உலக போட்டித் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய பங்காற்றினார். 

மேலும், 2014-2015 ஆம் ஆண்டிகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து, தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2009 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், 2010 கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மேலும், ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் 21 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robin Uthappa


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->