பிரிஸ்பேன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய ரெய்லி ஓபெல்கா; அரையிறுதிக்கு முன்னேறிய அரினா சபலென்கா..! - Seithipunal
Seithipunal


முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் சர்வதேச காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 07-06 , 06-03 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரான சர்வீட் ரெய்லி ஓபெல்கா வீழ்த்தியுளார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரெய்லி ஓபெல்கா முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் 'ரெய்லி ஓபெல்கா' அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றைப் பெற்றுக்கொடுத்துளார்.

இது குறித்து ரெய்லி ஓபெல்கா கூறுகையில் "நான் எனது புள்ளிகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன்,", "நான் அவர்களை அடித்தால், வரிடமிருந்து  திரும்பப் பெறுவது கடினம்.யாராக இருந்தாலும் அது கடினம், ஏன் என்றால் எதிரில் இருப்பது அவர்' என்று கூறியுள்ளார். "அவரை எதிர்த்துப் போட்டியிட்டதில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் எப்போதும் சிறந்த வீரர், ”என்று ஓபெல்கா மேலும் கூகூறியுள்ளார். 

அரையிறுதியில் ஓபெல்கா 07-05, 07-06 (5) என்ற செட் கணக்கில் ஜாகுப் மென்சிக்கை வீழ்த்திய ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்டை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் ஜிரி லெஹெக்கா கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.

37 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராகி வரும் அவர், இதுவரை 10 முறை வென்றுள்ளார்.

மெல்போர்னில் நடக்கும் போட்டியில் ஜோகோவிச்சுடன் புதிய பயிற்சியாளர் ஆண்டி முர்ரே இணைவார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன்,  இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பௌஸ்கோவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 06-03, 06-04 என்ற நேர் செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reilly Opelka defeated Djokovic in the quarterfinals Aryna Sabalenka advanced to the semifinals Brisbane Tennis


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->