#RCB vs SRH : தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூர் அணி.!!
rcb vs srh today match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 41வது லீக் ஆட்டமான இன்று ஹைதெராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்களை அடித்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி பெற்றது. ஹைதெராபாத் அணி கடந்த போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.
ஹைதெராபாத் அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 1 வெற்றியும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது.