CSK அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலகல்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா கடந்த ஐபிஎல் சீசனில் 16 கோடியில் தக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக சிஎஸ்கே அணிக்காக போட்ட சமூக வலைதள பதிவுகளை ஜடேஜா நீக்கியதால் அவருக்கும் அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், மும்பை அல்லது பெங்களூர் அணிக்கு அவர் செல்வார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravindra jadeja leave CSK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->