நான் என்ன செய்ய சொன்னால்.. நீ என்ன செஞ்சி இருக்க.. கோலியிடம் கோபத்தில் கொந்தளித்த ரவி சாஸ்திரி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று முன் தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால்  டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள். 

இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் நீஷமின் கண்மூடித்தனமான கேட்சில் ஆட்டமிழக்க, இந்தியா 24 ரன்கள் மட்டுமே எடுத்து, படு பாதாளத்தில் விழுந்தது. 

இந்நிலையில் தான் இளம் வீரர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட் போலவே அவசரப்பட்டு சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். 

7-வது விக்கெட் தான் உலக சாதனை ஜோடியாக அமைந்தது. தோனியுடன் இணைந்த ஜடேஜா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 59 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் அடித்தார். இறுதி நேரத்தில் அடிக்க வேண்டிய நெருக்கடியில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். 

49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன்அவுட் ஆனார் தோனி அரைசத்துடன் வெளியேறினார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது.  நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தினேஷ் கார்த்திக் அவுட் ஆனா உடனே அனைவரும் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாண்டிய இறங்கினர்.  பந்த் அவுட் ஆன உடன், ஆடை மாற்றும் அறையில் இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கோவத்தில் கொந்தளித்தார். தோனிக்கு பதிலாக பாண்டியாவை இறக்கியதால் கோலியிடம் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravi shastri angry with yesterday match


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal