ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! தமிழகத்திற்கு எதிராக சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், 'ஹெச்' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய பாபா சகோதரர்கள் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் தன் பங்கிறகு 69 ரன்கள் சேர்க்க தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 470 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சத்தீஷ்கர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சத்தீஷ்கர் அணி 5 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 365 ரன்கள் முன்னிலை பெற்ற்றிருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்பிரீத் சிங் சதமடித்து அசத்த, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் சத்தீஷ்கர் அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்துள்ளது.

கேப்டன் ஹர்பிரீத் சிங், 149 ரன்களுடனும், வீர் பிரதாப் சிங் 79 பந்துகளில் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதுவரை தமிழக அணி 209 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சித்தார்த் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranji Trophy TamilNadu Chathishgarh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->