கே.எல் ராகுலுக்கு மனநிலை பயிற்சி! வலை பயிற்சியும் நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. குரூப்-ஏ மற்றும் குரூப்-பி பிரிவுகளில் எந்த அணியும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் பெர்த் நகரில் தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. வரும் 30ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அட்டகாசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக டேட்டிங்கில் டேவிட் மில்லர், குயின் டிக்காக் மற்றும் பவுலிங்கில் ரபாடா, நார்ட்ஜே ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த போட்டிக்கு இதுவரை இந்திய அணி செய்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொண்டு களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் கடந்த இரு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். எதிர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே அச்சப்படுவது போல் தோன்றுகிறது என விமர்சனம் வைக்கப்பட்டது. இதன் காரணமாக கே.எல் ராகுலை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் கே.எல் ராகுலுக்கு மனநில பயிற்சி வழங்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு முன் விராட் கோலி அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்த பொழுது பேடி அப்டனிடம் மனநிலை பயிற்சி எடுத்துக் கொண்டு கம்பேக் தந்தார். இதேபோன்று ராகுலையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பேடி அப்டனிடம் இரண்டு மணி நேரம் மனநல மேம்பாட்டு பயிற்சி வழங்க ராகுல் டிராவிட் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கே.எல் ராகுலுக்கு வலை பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul dravid recommend Mental training for KL Rahul


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->