புரோ ஹாக்கி லீக்! இந்தியா தோல்வி.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் அணிக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய தோல்வியை தழுவியது.

மூன்றாவது புரோ ஹாக்கி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. உலகின் தரவரிசை பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள இந்தியா 11 -வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியிடம் 2-5 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஜர்மன்பிரீத் சிங் மற்றும் 57-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். 

இந்திய அணி ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் இதே பிரான்ஸ் அணியை 5-0 என்ற புள்ளி கணக்கிலும், தனது இரண்டாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரக்க அணியை 10-2 என்ற புள்ளி கணக்கிலும் அபார வெற்றியை பெற்றிருந்தது. மூன்றாவது ஆட்டத்தில் தோற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Hockey India Frans


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->