பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி! அதிர்ச்சி கொடுத்த லவ்லினா! - Seithipunal
Seithipunal


பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பன்னிரண்டு அணிகளை தலா 6 அணிகளாக பிரிப்பட்டு உள்ளது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்து, காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 3-2  என்ற கணக்கில் வென்ற இந்தியா, ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், 52 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோலுடன் சமனிலை பெற்றது. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கமால் போகவே, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டு, இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.


முன்னதாக பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோ ஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான்விடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paris Olympics INDvGBR Boxing Lovlina Borgohain 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->