வெண்கல கிண்ணம் கூட கிடையாது, பரிதாபமாக விரட்டி அடிக்கப்பட்ட பாகிஸ்தான்!  - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டுப்போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டாலும், ஆசியாவில் கிரிக்கெட்டில் பிரதான அணிகளாக இருக்கும் இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் அணிகளில் மூன்று  அணிதான் பதக்கங்களை வெல்லும் என்பது உறுதியானது. 

மற்ற ஆசிய அணிகளுக்கு கிரிக்கெட் புதிது என்பதால், இந்த ஐந்து அணிகளின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே அனைத்து முன்னணி அணிகளுக்கும் அதிர்ச்சியளிக்கும் அணியாக, ஆப்கானிஸ்தான் அணி இருந்து வருகிறது. 

முதலில் இலங்கையை லீக் சுற்றிலேயே வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான். அரையிறுதியில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாகிஸ்தான அணியை வெளியேற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. 

இந்த நிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் அரையிறுதியில் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 48 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம், 5 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. 

DRS விதிப்படி பங்களாதேஷ் அணிக்கு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. அதன்படி பங்களாதேஷ் அணிக்கு 65 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஐந்து ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் நான்கு விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் குவித்து பாகிஸ்தானை வென்று, வெண்கலத்தையும் வென்று விட்டது.  இறுதி ஓவரில் பாகிஸ்தான அணி 20 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான பந்தகிச்சை பதிவு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 

இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணி தான் விளையாடும், ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்த்த வேளையில், இந்தியா ஆப்கானிஸ்தான் என இறுதி போட்டி மாறி போனது. வெண்கலத்தையாவது பாகிஸ்தான் வென்று வரும்  என எதிர்பார்த்தால் வெண்கல கிண்ணம் கூட கிடையாது என வெறுங்கையோடு திரும்புகிறது. 

இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை ஆகிய நாடுகளில், ஐபிஎல் 20 ஓவர் போட்டித் தொடர் போல  போட்டி தொடரானது நடத்தப்படுகிறது. இதில் எங்கள் லீக் போட்டி தொடர்தான் சிறப்பானது என மார்தட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் அணியால், ஒரு இரண்டாம் நிலை  சர்வதேச அணியை உருவாக்க முடியாமல் திணறியது ஆசிய விளையாட்டு போட்டியில் அம்பலமாகியது. 

இந்தியா ஆப்கானிஸ்தான் இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் உலக கோப்பையில் விளையாடும் நிலையில், அவற்றின் இரண்டாம் கட்ட அணியை தான் ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்பி வைத்தது. அதில் ஆப்கானிஸ்தான் அணி அதிக சர்வதேச போட்டி அனுபவம் உள்ள வீரர்களை கொண்ட அணியாக அனுப்பியிருக்கிறது. 

ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரையோ அனுபவமும் இல்லாத, போதிய திறமையும் இல்லாத வீரர்களாக அனுப்பப்பட்டு அவர்கள் வெறுங்கையோடு திரும்ப வேண்டிய அவல நிலைக்கு வந்துவிட்டார்கள். கொடி கட்டி பறந்த அவர்களுடைய கிரிக்கெட் கட்டமைப்பானது, இன்று பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan out of the Asian game without medal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->