#BigBreaking : 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம்.! அடித்து துவசம் செய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் இந்திய அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது. 

இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி பதக்கம் வென்றுள்ளது. 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா:

* பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

* நேற்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

* மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. 

* மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரரிடம் 10 -0 என்ற கணக்கில் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இருப்பினும், வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தீபக் புனியா விளையாட இருக்கிறார்.

* இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆட உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

olympic indian male hockey team win medal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->