ஐ.பி.எல் போட்டி - மாநகர பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை.! - Seithipunal
Seithipunal


நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள பிளே ஆப் சுற்றின் குவாலிபையர்-2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. 

இதில் வெற்றி பெறும் அணி வரும் 26-ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

"நடப்பு ஐ.பி.எல். சீசனின் குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வரும் 24 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. ஆகவே, போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

not allowed free travel in chennai city bus of ipl


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->