ஆஸ்திரேலியா அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தது. இன்று முதல் சூப்பர்-12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன. முதல் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியை சிட்னி மைதானத்தில் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை எடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தார். நியூசிலாந்து அணி 4.1 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆலன் ஆஸ்திரேலியா வீரர் அசில்வுட் பந்தில் அவுட் ஆனார். எதிர்முனையில் விளையாடிய டேவொன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அசில் ரோடு 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெடுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரல்களை அடித்தது. 

இதனை அடுத்து 201 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். பேட் கம்மிங்ஸ் 18 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். இதனால் 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 2.1 ஓவர் வீசி 6 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் சான்டர் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 24 ரங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது 58 பந்துகளில் 92 ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வேவுக்கு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand beat Australia by 89 runs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->