வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு புதிய அப்டேட்.! பயனாளர்கள் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


தற்போது  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அதிகமாக விரும்புகின்றனர். இதில் புதிய முயற்சியை  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டரிலும் ஷேர் செய்யலாம். இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற மற்ற ஆப்களில் ஷேர் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப் பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய வசதிகள்  கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். மேலும், இன்ஸ்டாகிராம், ஜிமெயில், கூகுள் போட்டோஸ் போன்ற மற்ற ஆப்களிலும் நமது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும் வசதியுடன் இந்த புதிய அப்டேட் வர உள்ளது.

இந்த புதிய முயற்சியால் பேஸ்புக்கில் தற்போது வைக்கப்படும் ஸ்டேட்டஸ்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளனர். சாதாரணமாக ஒரு போட்டோ, வீடியோவை எவ்வாறு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறதோ, அதே போன்று தான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஷேர் செய்யும் முறையில் இருக்கும். 

இந்த வசதி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும். தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் ஷேர் வசதியை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update for WhatsApp Status Lovers! Welcome users


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->