இந்திய அணியின் வெற்றி நாயகன் தல தோனியின் பிறந்த நாள் இன்று.. அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீகார், ராஞ்சியில் (தற்போது ஜார்க்கண்டில் உள்ளது) பிறந்தார். 

இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர் (CB Series) மற்றும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது.

2008 மற்றும் 2009ல் ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது (ICC OBI Player of the Year), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ல் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்றது. அதுவும் இறுதிப் போட்டிகள் சிக்சர் அடித்து தோனி அந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்தார். 

இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி கோப்பைகளை வென்றது, தோனிக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை வாரி குவிக்க துவங்கியது. அவரது கேப்டன்ஷிப் வியூகங்கள் எப்படிப்பட்ட அணியையும் விழுதும் சூட்சமத்தை கொண்டது. 

அது தான் இன்றும் அவர் அணியில் இருக்க காரணம். தற்போது அவரை ஓய்வு பெறவேண்டும் என ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களை விமர்சிக்கின்றனர். ஆனால் என்றுமே தல தோனி தான் என கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். 

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் தோனி பங்கேற்கவில்லை. தற்போது ஐபிஎல் போட்டியில் தோனி பங்கேற்பதை பார்க்க தோனி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர் கொண்ட ஒரே வீரர் எம்எஸ் தோனி மட்டுமே. இன்று தோனியின் 39வது பிறந்த நாள் ஆகும். தோனி ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni 39th birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->