சதத்தால் சாதனை படைத்த விராட் கோலி - தமிழக முதல்வர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை தொடரில் முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன் மூலம் விராட் கோழி ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதுவரைக்கும் ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

இந்த ஆட்டத்தை நேரில் கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் விராட் கோலி தனது சாதனையை முறியடித்துள்ளார். இதற்கிடையே விராட் கோலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம்பமுடியாத சாதனை! 50 ஒருநாள் சதங்கள்! விராட் கோலி, நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக்கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wishes to virat kholi for century


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->