இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை திடீர் ஒய்வு! ரசிகர்களுக்கு அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மிதாலி ராஜ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) இன்று  சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக 2006 ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் போட்டியின் கேப்டனாக இருந்த அவர், இதுவரை 89 போட்டிகளில் விளையாடி, 2364 ரன்கள்  எடுத்துள்ளார். இந்திய அளவில் 2000 ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிறகு தான் இந்திய ஆண்கள் அணியின் சாதனை வீரர்கள் கோலி, ரோஹித் 2000 ரன்களை கடந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இருபது ஓவர் அணியின் கேப்டனாக  2012, 2014 மற்றும் 2016 உலகக் கோப்பைகள் உட்பட மொத்தம் 32 போட்டிகளில் அவர் இந்தியாவை வழி நடத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அணியில் ஒரு வீராங்கனையாக இடம்பெற்று இருந்தார். அவரது கடைசி 20 ஓவர் போட்டியானது இங்கிலாந்துக்கு எதிராக அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியாகும். அந்த போட்டியில் 32 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தார். 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவோ அவர் 20 ஓவர் போட்டி ஆட்டங்களில் விலக்கி வைக்கப்பட்டு வருகிறார். கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் அவர் வெளியே உட்காரவைத்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. சர்வதேச இருபது போட்டிகளில் அதிகம் விளையாடுவார்கள் பட்டியலில் அவர் 21 வது இடத்தில் உள்ளார், இந்திய தரப்பில் ஹர்மன்பிரீத் கவுர் (96) மட்டுமே அவருக்கு முன் உள்ளார்.

2006 முதல் இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய நான், 2021 ஒருநாள் உலகக் கோப்பைக்கான எனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக நான் இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என அவர் BCCI க்கு தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பையை வெல்வது எனது கனவு என்றும், 20 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவர் தற்போது வட மாநிலத்தில் வசித்தாலும், இவரது தந்தை துரைராஜ் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mithali Raj retired From T20 Matches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->