பிரிமியர் லீக்கில் சூதாட்டம்! இரண்டு அணிகளுக்கு தடைவிதிக்க பிசிசிஐ முடிவு! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஐபிஎல் 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுவது போல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற பெயரில்20ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பிரதான நகரங்கள் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் படி வருடம் வருடம் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இவ்வாறான போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் கர்நாடக பிரிமியர் லீக்கில் சூதாட்டம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும் சூதாட்டம் விளையாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற மதுரை மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதிய போட்டியில் சுமார் 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து இந்த இரண்டு அணிகளையும் தடை செய்ய வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் அறிவிப்பை ஏற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரண்டு அணிகளையும் தடை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இரண்டு வருடங்கள் விளையாட தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Match fixing in TNPL league


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->