தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. 

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோத உள்ளன. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்தநிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை 23 வயதான ஸ்மிர்தி மந்தனா ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது பந்து தாக்கியதில் அவரது வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இது தொடர்பாக இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் கூறியதாவது, இது லேசான எலும்பு முறிவு தான். அவரது கால்பாதத்தில் தற்போது கொஞ்சம் வீக்கம் உள்ளது. இதனால் மந்தனா எப்போது களம் திரும்புவார் என இப்போதே கூறமுடியாது என்றார். ஒரு நாள் தொடர் முடிந்து அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மந்தனா ஆடுவது சந்தேகம் தான். 

மந்தனாவுக்கு பதிலாக 20 வயதான ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்ட்ராகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mandhana injured during practise


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal