#IPL2022 : சிக்சர் மழை பொழிந்த லக்னோ கொல்கத்தா அணிகள்.. லக்னோ த்ரில் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற 66 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ ஜெயண்ட்ஸ் சூப்பர் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல்-குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தது. இறுதியில் லக்ன அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது.

இதில் குயின்டன் டி காக் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10  சிக்சர்களுடன் 140 ரன்களும், கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lucknow super Giants win by 2 runs against Kolkata


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->