டி20 போட்டியில் 2 பந்துகளில் இலக்கை எட்டிய சுவாரசியம்! ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த போட்டி!  - Seithipunal
Seithipunal


20 ஓவர் கிரி்க்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணி குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த சாதனையும், ஒரு அணி குறைந்த பந்தில் சேசிங் செய்த சாதனையும் ஒரே போட்டியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

ஐசல் ஆப் மேன் என்ற நாடானது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையே இருக்கும் ஒரு குட்டி தீவாகும். ஐசல் ஆப் மேன் நாட்டு அணி ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 

முதல் 5 போட்டிகளில் ஸ்பெயின் அணி 4-0 என்று தொடரை வென்று இருந்தது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்பெயின் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐசஎல் ஆப் மேன் அணி 8.4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 

ஏழு வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐசல் ஆப் மேன் அணியில் அதிகபட்சமாக ஜோஸப் பாரோஸ் 4 ரன்கள் சேர்த்திருந்தார். ஜார்ஜ் பாரோஸ், லூக்வார்ட், ஜேகப் பட்லர் தலா 2 ரன்கள் சேர்த்தனர். 

ஸ்பெயின் வேகப்பந்துவீச்சாளர் கம்ரான் 3-வது ஓவரில், ஹாட்ரிக் விக்கெட் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அட்லிப் முகமது 4 விக்கெட்டுகளையும், பர்ன்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்பெயின் அணி, முதல் ஓவரின் இரு பந்துகளிலும் 2 சிக்சர்கள் விளாசி வெற்றி பெற்றது. ஒரு பந்து நோபாலும் வீசப்பட்டது. 

டி20 வரலாற்றில் இதற்கு முன் குறைவான ஸ்கோர் என்பது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கெதிராக 15 ரன்களில் சுருண்டது. அந்த சாதனையை ஐசல் ஆப் மேன் அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்து தன்வசப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lowest score in T20 cricket at ICC event match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->